இந்தியாவிலேயே 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட, அதிக எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் ஒரே மாநிலம் உத்தரபிரதேசம் ஆகும். இம்மாநிலத்தில் உள்ள அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகும் காந்தியும், பிரதமர் மோடி வாரணாசியிலும் போட்டியிடுகின்றனர்.
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரேதசத்தின் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு பகுதி பொதுச்செயளாலரான பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பலத்த போட்டி களங்களை கொண்ட உத்தரபிரேதசத்தில், பகுசஜ் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணியில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மக்களவை தேர்தலில் உத்திரபிரதேசத்தில் ஏழு கட்ட வாக்கு பதிவு நடைப்பெற உள்ள நிலையில், முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்த முடிந்தது. மீதமுள்ள ஆறு கட்ட வாக்குபதிவு விரைவில் நடைப்பெறவுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.