இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மே 6ஆம் தேதியான இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஏற்கனவே, 425 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 59 தொகுதிகளுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
வாக்களிப்பதை அலட்சியப் படுத்திய முன்னாள் முதலமைச்சர்! - rajgarh
போபால்: மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய சிங்கிடம், எப்போது வாக்களிக்க போகிறீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வாக்களிக்க முயற்சிப்பதாக அவர் அலட்சியமாக பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை இருந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய சிங், தனது வாக்கினைப் பதிவு செய்யாமல் இருந்தார்.
இதுகுறித்து, செய்தியாளர் ஒருவர் அவரிடம், ‘எப்போது வாக்களிக்கப் போகிறீர்கள்?‘ என எழுப்பிய கேள்விக்கு, ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் வாக்களிக்க முயற்சிப்பதாக அலட்சியமாக பதிலளித்தார். இந்த விவாகரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தனது வாக்கினைப் பதிவு செய்ய இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அடுத்தமுறை நிச்சயமாக வாக்களிப்பதாகவும் திக் விஜய சிங் விளக்கமளித்துள்ளார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.