மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.
'கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கை இல்லை..!' - அம்ரிந்தர் சிங் - அம்ரிந்தர் சிங்
சண்டிகர்: "மக்களவைத் தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிகளின்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிந்தவுடன் வெளியிடப்பட்டது. அனைத்து கருத்துக்கணிப்புகளுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறின.
இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், "கருத்துக் கணிப்புகளின் மேல் எனக்கு சந்தேகம் உள்ளது. கருத்துக்கணிப்புகள் கூறுவதைவிட மாநில அளவிலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. என் அனுபவம் வைத்தே என்னால் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. கருத்துக்கணிப்புகள் நடத்துபவர்கள் எப்படி இதனை கணிக்க முடியும்" என்றார்.