ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த பி.எம்.நரேந்திர மோடி படத்தை விதிகள் மீறப்பட்டதாக கூறி அந்த தேதியில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு படத்தை பார்த்துவிட்டு தடையை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
பி.எம்.நரேந்திர மோடி படத்தை இன்று பார்வையிடும் தேர்தல் ஆணையம்! - பி.எம்.நரேந்திர மோடி
டெல்லி: தேர்தல் விதிகளை மீறியதாக தடை செய்யப்பட்ட பி.எம்.நரேந்திர மோடி படத்தை உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தேர்தல் ஆணையம் இன்று பார்வையிடுகிறது.
முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முழுபடத்தை பார்த்துவிட்டு முடிவு எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு பி.எம்.நரேந்திர மோடி படத்தை இன்று பார்வையிடுகிறது.
இப்படத்தை தடை விதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் மோடியின் தீவிர ஆதரவாளரான நடிகர் விவேக் ஓபராய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது