கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரசாத் நாகராஜு என்பவர் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக உள்ளார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கோஷ்கோடே கிராமத்தில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது அவர்களுடன் வந்த இசைக்குழு 'நாகின்' பாடலை இசைத்தனர்.
ஓட்டுக்காக பாம்பு நடனமாடிய காங்கிரஸ் அமைச்சர்
பெங்களூரு: கர்நாடகாவில் வீட்டு வாரிய அமைச்சராக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரசாத் நாகராஜ் தேர்தல் பரப்புரையின் போது பாம்பு நடனமாடி வாக்கு சேகரித்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
காங்கிரஸ் அமைச்சர்
இந்தப் பாடலால் ஈர்க்கப்பட்ட நாகராஜ் பாம்பு நடனம் ஆடத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் அவரோடு நடனமாடினர். சுமார் பத்து நிமிடங்கள் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ்-மஜத அமைச்சரவையில் இடம்பெற்ற பணக்கார அமைச்சர் பிரசாத் நாகராஜ்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
Last Updated : Apr 11, 2019, 9:59 AM IST