தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்க பல தலைவர்கள் முயன்றனர். ஆனால், மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அது பகல் கனவாகவே அமைந்தது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி - காங்கிரஸ் கூட்டணி? - கூட்டணி
ஹைதராபாத்: மத்தியில் அமைகின்ற அடுத்த அரசு ராகுல் காந்தி தலைமையில் அமைய உதவும்படி காங்கிரஸ் சார்பில் தெலங்கானா ராஸ்டிரிய சமிதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் அடுத்த அரசு ராகுல் காந்தி தலைமையில் அமைய உதவும்படி ஆந்திர காங்கிரஸ் தலைவர் என்.ரகுவீரா ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரகுவீரா ரெட்டி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டதாவது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நீங்கள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க பாஜக மறுத்துள்ளது. ஆனால், ராகுல் காந்தி பிரதமரான பிறகு போடக்கூடிய முதல் கையெழுத்து ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்துக்குதான் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். ஆந்திராவில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த விவகாரத்தில் உதவ வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளோம்" என்றார்.