தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

வட இந்தியாவில் திடீர் புயல்; அனைத்து விதமான உதவிகளை செய்ய தயார் - ஜெ.பி.நட்டா - வடஇந்தியாவில்

டெல்லி: ராஜஸ்தான், ம.பி, குஜராத் போன்ற இடங்களில் திடீர் புயல், மழை காரணமாக பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதால் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயார் என ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

ஜெ.பி.நட்டா

By

Published : Apr 17, 2019, 1:28 PM IST

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வட இந்திய பகுதிகளில் திடீர் புயல், மழை காரணமாக பெரும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமான உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வட இந்திய பகுதிகளில் திடீர் புயல், பலத்த மழை பெய்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி பெரும் உயிர் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விதமான உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. மத்திய சுகாதார செயலாளர்களை அந்ததந்த மாநில அரசு அலுவலர்களுடன் தொடர்பில் இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details