தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

காவல்துறை மீது வழக்கு தொடர்வோம் - வானதி சீனிவாசன் பேட்டி - வழக்கு

காவல்துறை தவறான செய்திகளை பரப்புகிறது, அவ்வாறு செய்தால் நாங்கள் காவல்துறை மீது வழக்கு தொடர்வோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மீது வழக்கு தொடர்வோம் -  வானதி சீனிவாசன் பேட்டி
காவல்துறை மீது வழக்கு தொடர்வோம் - வானதி சீனிவாசன் பேட்டி

By

Published : Apr 3, 2021, 9:59 PM IST

கோவையில் கடந்த 31ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. அதில், பாஜக இந்து முன்னணி அமைப்பினர் கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர்.

பின்னர், கற்களை கொண்டு தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், காவல்துறையினர் முறையான பாதுகாப்பு வழங்காமல் இருந்தது அந்தச் சர்ச்சைக்கு காரணம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மீது வழக்கு தொடர்வோம் - வானதி சீனிவாசன் பேட்டி

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நாகராஜ் அவர்களை சந்தித்து மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘’பாஜக, சமூகங்களுக்கு இடையே அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, விசாரிக்க மாவட்ட ஆட்சியரை பரிந்துரைத்துள்ளோம்.

நேற்று கூட பாஜக தொண்டர்களை அழைத்து சென்று உணவு கூட வழங்காமல் 12 மணி நேரம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். தற்போது கோவைக்கு புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அதிமுக வழக்குத் தொடுத்தால் அதனை விசாரிப்பது இல்லை. ஆனால், திமுகவினர் புகார் தொடுத்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்கிறார்.

இதுபோன்ற தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளன. இனி எனது பெயரில் செய்தித்தாள்களில் விளம்பரம் தரக்கூடாது என்று அறிக்கை விடுத்துள்ளேன். தற்போது, உள்ள தொழில்நுட்பம் பத்து பதினைந்து வருடங்கள் உழைப்பவர் வெறும் ஐந்தே நிமிடத்தில் காலி செய்வது போல் உள்ளது. நேற்று பாஜகவினரின் 6 வாகனங்கள், பூர்த்தி செய்யப்பட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன குறித்து கேள்வி எழுப்பியதற்கு காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் காவல்துறையினர் மீது தனிப்பட்ட முறையில் கூட நாங்கள் வழக்கு தொடர்வோம். நாங்கள் அதுபோல் செய்வதில்லை. அதுபோல் செய்பவர்களும் நாங்கள் அல்ல. தற்பொழுது, உள்ள சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியின் ஆடைகளை அணிந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனவே அதனை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி

ABOUT THE AUTHOR

...view details