விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ் இடையன்குளம் கண்மாயிலிருந்து மயிலி கிராமத்திற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து கால்வாய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு அந்த நீர்வரத்து கால்வாய் மூடப்பட்டதாக மயிலி கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
கிராம மக்கள் குற்றச்சாட்டு இதையடுத்து, நீர்வரத்து கால்வாய் அமைத்துத் தரக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பலகட்ட போராட்டம் நடத்தியும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 6) அப்பகுதியைச் சேர்ந்த 300 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக கூறி வாக்களிக்காமல் இருந்துவருகின்றனர்.
மேலும், வாக்குப்பதிவு தொடங்கி ஆறு மணி நேரமாகியும் கட்சிப் பொறுப்பில் உள்ள பத்து நபர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். பொதுமக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
தற்போது, நீர்வரத்து கால்வாய்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அளித்தால் மட்டுமே பொதுமக்கள் வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 3 மணி நிலவரப்படி 53.55% வாக்குகள் பதிவு