சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 58 {1})(b)-ன் கீழ் 25, வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட டி.எ.லி பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி எண் 92 -ல் மறுவாக்குப் பதிவு வருகிற 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.
வேளச்சேரி மறுவாக்கு பதிவின் போது 548 ஆண் வாக்காளர்களுக்கு மட்டுமே அனுமதி! - velachery constituency repolling
சென்னை: வேளச்சேரி மறுவாக்கு பதிவின் போது 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே அனுமதி என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
velachery constituency repolling
இந்த வாக்குச் சாவடியானது ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி என்பதால், வாக்குச் சாவடி எண் 92க்குள்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும். ஏற்கனவே தபால் வாக்கு அளித்தவர்களும், அளிக்க இருப்பவர்களும் நேரில் சென்று வாக்களிக்க இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.