தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

பேரவைத் தேர்தல் 2021: 'மக்கள் மகிழும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்'

தேர்தல்
தேர்தல்

By

Published : Mar 8, 2021, 9:53 AM IST

Updated : Mar 8, 2021, 10:35 PM IST

20:09 March 08

'மக்கள் மகிழும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்'

மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. 

அதிமுக அறிவிக்கப்போகும் திட்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு திமுக அறிவித்துவருகிறது. அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள், மீண்டும் இணைய விரும்பினால் தலைமை முடிவுசெய்யும். கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவு என  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

19:43 March 08

எடப்பாடியின் மகளிர் தின தேர்தல் பரிசு!

அதிமுக தேர்தல் வாக்குறுதி 

அதிமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

19:20 March 08

மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

19:06 March 08

கொமதேக தொகுதி ஒதுக்கீடு இழுபறி

கொமதேக தொகுதி ஒதுக்கீடு இழுபறி

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடுசெய்யப்பட்டதாக தகவல்கள் பரவலாக வெளியான நிலையில், இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈஸ்வரன் அளித்த பேட்டியில், இதுவரை தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுவரை திமுக கொங்கு மக்கள் தேசியக் கட்சி இடையே இருமுறை தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

19:04 March 08

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் வேல்முருகன்

திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு. ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

18:14 March 08

ஆதித் தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி!

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.

17:56 March 08

அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சி!

அமமுக கூட்டணியில் ஓவைசி

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

17:04 March 08

சிறிய கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை!

திமுக தலைவர் ஸ்டாலின் - பொதுச் செயலாளர் துரைமுருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து இன்று மாலை திமுக ஆலோசனை மேற்கொள்கிறது.

16:52 March 08

சட்டப்பேரவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் - நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

16:43 March 08

திமுகவின் '2 ஏக்கர் நிலம்' வாக்குறுதி என்னாச்சு?

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று வினா தொடுத்த பாஜக தமிழ்நாடு தலைவர் எல். முருகன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

16:33 March 08

அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரம்

கூட்டணி நிலவரம்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தேர்தலில் களம் காண கூட்டணி அமைத்து, தொகுதிப் பங்கீடு முடிவான கட்சிகள் குறித்த தற்போதைய விவரங்களைக் காணலாம். 

15:59 March 08

13 தொகுதிகள்? நோ சொல்லும் கட்சி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தேர்தலில்  கூட்டணி சார்பில் போட்டியிட 13 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இச்சூழலில், 13 தொகுதிகளை ஏற்க தேமுதிக மறுத்து வருவதால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

13:36 March 08

தமிழ்நாட்டில் 88,937 வாக்குச்சாவடிகள் - தலைமை தேர்தல் அலுவலர்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு

தமிழ்நாட்டில் 88ஆயிரத்து 937, வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் கையுறை வழங்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

12:49 March 08

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதியா?

திமுக தலைமைச் செயலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கேட்டிருந்த நிலையில், ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், திமுக எத்தனைத் தொகுதிகள் ஒதுக்கினாலும் ஏற்றுக்கொள்வோம் என்றும், இன்று மாலை தேர்தல் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போவதாகவும் செய்தியாளர்களிடத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

12:27 March 08

தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு!

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகாவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி, வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

11:54 March 08

திமுகவுக்கு ஆதரவு கரம் நீட்டிய கருணாஸ்!

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ் , தற்போது திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கிறார். இதற்கான ஆதரவு கடிதத்தை அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் வழங்கினார்.

11:45 March 08

உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது - டிடிவி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தான் உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது; அமமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

10:39 March 08

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்!

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ஒப்பந்தம்

திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, திமுக தலைமையகத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  

10:04 March 08

கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில், தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், நாளை காலை 10:30 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 

09:55 March 08

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இன்று அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

07:05 March 08

தேர்தல் செய்திகள்: எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலில் களம் காண கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு முடிவான கட்சிகள் குறித்த விவரங்களைக் காணலாம். 

திமுக கூட்டணி  அதிமுக கூட்டணி    மக்கள் நீதி மய்யம் கூட்டணி     நாம் தமிழர் கட்சி 
  காங்கிரஸ் - 25   பாமக - 23   இந்திய ஜனநாயக கட்சி - ? 

 

 

 234 தொகுதிகளிலும்

 தனித்துப் போட்டி

 

 

 

 

  விசிக - 6   பாஜக - 20   சமக - ?
  மதிமுக - 6   தமாகா - ?  
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6   தேமுதிக - ?  
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 6   தமமுக - ?   
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3    
  மனிதநேய மக்கள் கட்சி - 2    
  தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 1    
  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ?        
Last Updated : Mar 8, 2021, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details