அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்செய்யப்பட்டார்.
தேர்தல் 2021: அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம் - election manifesto 2021
15:36 March 18
அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்
12:23 March 18
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்னுத்தாய் வேட்புமனு தாக்கல்
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.கே. பொன்னுத்தாய் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உடனிருந்தார்.
12:23 March 18
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா வேட்புமனு தாக்கல்!
அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
12:23 March 18
வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் அண்ணாமலை, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
12:04 March 18
மக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் - சைதை துரைசாமி
சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் இன்றைய தேர்தல் பரப்புரையில், அதிமுக தொகுதி மக்களின் கைபேசி எண்கள் பெறப்பட்டு பகுதி வாரியாக புகார்கள் பெற ஏற்பாடு செய்யப்படும். பெறப்பட்ட புகார்களுக்கு உரிய தீர்வு எட்டப்படும் என கூறினார்.
11:52 March 18
அழிவுத் திட்டங்களை கொண்டு வந்தது திமுக தான் - முதலமைச்சர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக; அதை தடுத்து நிறுத்தியது அதிமுக என்று தேர்தல் பரப்புரையில் கூறிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை எனக் கூறினார்.
10:55 March 18
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு
ஒரே நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
10:43 March 18
திமுக ஆட்சிக்கு வந்தால்!
சமையல் எரிவாயு விலையில் ரூ.100 குறைக்கப்படும் என்றும் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என, கும்மிடிப்பூண்டியில் நடந்த தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
10:34 March 18
பாமக வேட்பாளர் மாற்றம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வேத.முகுந்தனுக்கு பதிலாக வடிவேல் ராவணன் வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளார். இதனை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.
09:11 March 18
தேர்தல் முதன்மை தகவல்கள்: தலைவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இன்று தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை என்பதனை அறிந்துகொள்ளலாம்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் | ஓ. பன்னீர்செல்வம் | திருவெற்றியூர் தேரடி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு
- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் | கே. பழனிசாமி | திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம்
- திமுக தலைவர் | மு.க. ஸ்டாலின் | கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை
- அமமுக பொதுச் செயலாளர் | டிடிவி தினகரன் | வேளச்சேரி, சோழிங்கநல்லூர், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர்
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் | சீமான் | பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம்