தமிழகத்தின் வளர்ச்சியை பாழடித்து, டெல்லிக்கு அடிமை சாசனம் எழுதித் தரும் அதிமுக ஆட்சியை விரட்டிட கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் திரள்கின்றனர். அதிமுக-வில் ஒருவர் வென்றாலும் அவர் பாஜக-வின் ஊதுகுழலே; அதிமுக, பாஜக பெருங்கேடு என்பதை உணர்ந்துள்ளனர். மக்கள் திமுக பக்கம் என ஸ்டாலின் ட்வீட்.
ELECTION BREAKING: அதிமுக, பாஜக பெருங்கேடு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் - ஸ்டாலின் ட்வீட் - அதிமுக, பாஜக பெருங்கேடு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் - ஸ்டாலின் ட்வீட்
10:58 March 18
21:40 March 17
அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், பெருங்கேடு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் - ஸ்டாலின் ட்வீட்
20:45 March 17
தென்மண்டல ஐ.ஜி முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற உத்தரவு
தென்மண்டல ஐ.ஜி முருகன், உதவி ஆணையர் மற்றும் 9 டிஸ்பிக்களை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
20:09 March 17
சென்னையில் ஸ்டாலின் சூறாவளி பரப்புரை
சென்னை: தாம்பரத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு பல்லாவரம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.
19:17 March 17
உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசியவர் எடப்பாடி - ஸ்டாலின்
டெல்லியில், உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளை, வியாபாரிகள் என கொச்சைப்படுத்தி பேசியவர் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19:02 March 17
அதிமுகவினர் தவாக-வில் இணைந்தனர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணைந்துள்ளனர்.
16:59 March 17
சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 தானா?
சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என அவரது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில், எழுத்துப்பிழையால் தவறு நேர்ந்துள்ளதாகவும், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
16:52 March 17
தெர்மாகோலுடன் செல்லூர் ராஜுவுக்கு போட்டியாக வந்த சின்னம்மா!
தமிழ்நாடு அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்கும் விதமாக, அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மா தெர்மாகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
16:09 March 17
தொண்டரின் 'புட் பாய்சன்' பதில், திடுக்கிட்ட உதயநிதி!
அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட உதய நிதி மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து கூட்டத்தினரை நோக்கி 'ஜெயலலிதா எப்படி இறந்தார் தெரியுமா?' என்று உதயநிதி கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'புட் பாய்சன்' என்று பதிலளிக்க, அதிர்ச்சியடைந்த உதயநிதி, சுதாரித்துக் கொண்டு, 'உனக்கென்னப்பா... நீ சொல்லிட்டு போயிருவே, என் மேல தான் வழக்கு போடுவானுங்க' என்று வேடிக்கையாகத் தெரிவித்தார்.
16:04 March 17
பனியனுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர்!
ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரகுமார், சட்டை இல்லாமல், வெறும் உள் பனியனுடன் தலைப்பாகை அணிந்து விவசாயி தோற்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
15:45 March 17
விருதுகள் பெறாத துறைகளே இல்லை - முதலமைச்சர்
தமிழ்நாட்டில் விருதுகள் பெறாத துறைகளே இல்லை எனக் கூறிய முதலமைச்சர் கே. பழனிசாமி, 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என தனது தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.
15:40 March 17
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேட்புமனு தாக்கல்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விராலிமலைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
15:26 March 17
நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு!
நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக 171இ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
13:52 March 17
தீய சக்தி திமுக வரக் கூடாது, மீண்டும் அம்மா ஆட்சி- டிடிவி தினகரன்
சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்கு உண்டு, தீயசக்தி திமுகவை வரவிடக்கூடாது, துரோக சக்திகள் வரக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் அமமுக தலைமையிலான கூட்டணியின் இலக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
12:22 March 17
கேப்டன் தனித்து நின்று வென்றுக் காட்டியவர் - டிடிவி
கேப்டன் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்றுக் காட்டியர் எனச் செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
11:56 March 17
எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் 17 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது எஞ்சியுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- தளி - நாகேஷ் குமார்
- விளவங்கோடு - ஜெயசீலன்
- உதகமண்டலம் - போஜராஜன்
ஆகியோர் தேர்தலில் களம் காண்கின்றனர்.
11:52 March 17
விஜயகாந்த் - டிடிவி சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
11:49 March 17
தேமுதிக கரூர் வேட்பாளர் மாற்றம்!
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ரவி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளரை மாற்றம் செய்து தங்கராஜ் என்பவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
09:43 March 17
தேர்தல் முதன்மை செய்திகள்: தத்தளிக்கும் தமிழகம் - டிடிவி
தமிழ்நாடு வெற்றிநடை போடவில்லை... கடன் சுமையில் தத்தளிக்கிறது என்று கூறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் வட்ட செயலாளர்கள்தான் காவல் ஆய்வாளர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்.