காஞ்சிபுரத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது பேசி வருகிறார். "அனைவருக்கும் இவலச வீடு என்று முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டமானது மேற்கொண்டு சுலபமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதற்கான திட்டம்" என கமல் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் 2021: தேர்தல் முதன்மை தகவல்கள் - தேர்தல் அறிக்கை 2021
21:25 March 14
காஞ்சிபுரத்தில் கமல் பரப்புரை
20:51 March 14
தேமுதிக வேட்பாளர் பட்டியல் - 5
ஆலங்குளத்தில் தேமுதிக இளைஞரணி செயலாளர் ராஜேந்திரநாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20:51 March 14
தேமுதிக வேட்பாளர் பட்டியல் - 4
தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
20:45 March 14
தேமுதிக வேட்பாளர் பட்டியல் - 3
விருக்கம்பாக்கம் தொகுதியில் தேமுதிக துணை செயலாளர் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்
20:41 March 14
தேமுதிக வேட்பாளர் பட்டியல் - 2
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அவரும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
20:32 March 14
தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டி.
20:31 March 14
அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
- பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான் தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவித்திருந்த ராம பழனிசாமிக்கு பதிலாக செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என ஒபிஎஸ் - இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
20:06 March 14
குல விளக்கு திட்டம்
குல விளக்கு திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19:46 March 14
தேமுதிக தொகுதிப் பட்டியல் - 3
60 தொகுதிகளில் 23 தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
19:34 March 14
தேமுதிக தொகுதிப் பட்டியல் - 2
தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 23 தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
19:29 March 14
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
19:20 March 14
விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- காட்டுமன்னார்கோவில் - சிந்தனை செல்வன்
- வானூர் - வன்னி அரசு
- நாகப்பட்டினம் - ஆளுர் ஷா நவாஸ்
- திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி
- அரக்கோணம் - கௌதமசன்னா
- செய்யூர் -பனையூர் பாபு
19:00 March 14
ஜெயலலிதா மரணம்: திமுகதான் காரணம்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுகதான், ஆண்டவன் நிச்சயம் தண்டனை அளிப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
18:34 March 14
அதிமுக தேர்தல் அறிக்கை: அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின்
முக்கிய அறிவிப்புகள்:
- அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின்
- ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்
- வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
- கரிசல், களிமண் எடுக்க தடையில்லா அனுமதி
- பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்
- கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
- அம்மா இல்லம் என்ற பெயரில் அனைவருக்கும் வீடு
- மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும்
- மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்
- தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என பெயர் சூட்டப்படும்
- காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
- பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்
- கச்சத்தீவை மீட்க நடவடிக்கை
- வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்
- மாவட்டம் தோறும் மினி ஐடி பார்க் அமைக்கப்படும்
- நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து
- பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை
- ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை
- ரேசன் பொருள்கள் வீடு தேடி வழங்கப்படும்
- நகரப்பேருந்துகளில் மகளிருக்கு 50% கட்டணச்சலுகை
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் அடுப்பு
- கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும்
- 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
18:21 March 14
ஒபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து வெளியீடு
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
18:06 March 14
17.7 லட்சம் மனுக்கள் பெற்றுள்ளோம் - ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் திமுக நடத்திய பொதுக்கூட்டங்களில் மக்களிடம் இருந்து மொத்தம் 17.7 லட்சம் மனுக்கள் பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. "நாங்கள் மனுக்களை பெறவில்லை; மக்களின் இதயங்களை பெற்றுள்ளோம்" என அண்ணா அறிவாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின் கூறினார்.
16:23 March 14
அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் உறுதி
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதில் 35 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் வேட்பாளர் பெயர்கள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15:33 March 14
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
15:16 March 14
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
13:57 March 14
அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு
அரசு பணியாளரைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜு மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைத்து, வாகன தணிக்கை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
09:44 March 14
தேர்தல் முதன்மை தகவல்கள்: பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணன்!
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.