சென்னையில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக துணைச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தரக்குறைவாகவும் அவதூறாக பேசியுள்ளார்.
முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய ஆ. ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருவண்ணாமலை அதிமுக ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கலியபெருமாள் தலைமையில் அண்ணா நுழைவுவாயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ராசாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - admk protest
திருவண்ணாமலை: திமுக எம்பி ராசாவின் இழிபேச்சை கண்டித்து, அவரது உருவப்படத்தை காலணிகளாலும் துடைப்பத்தாலும் தாக்கி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆ ராசாவின் உருவ படத்தை காலணியால் தாக்கி போராட்டம்
மேலும் ராசாவின் உருவப்படத்தை காலணிகளாலும் துடைப்பத்தாலும் தாக்கி அவரை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
இதையும் படிங்க:அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்