தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

திமுக-அதிமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் - money seized

ஓட்டப்பிடாரம் அருகே திமுக-அதிமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வஅதிமுக -திமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம்  பறிமுதல்
அதிமுக -திமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்

By

Published : Apr 5, 2021, 4:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஓசனூத்து, பாஞ்சாலங்குறிச்சி, சிலோன் காலனி ஆகிய பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிமுக பிரமுகரின் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சத்து 86 ஆயிரத்து 180 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதயடுத்து, பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது திமுக பிரமுகரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து, ஓட்டப்பிடாரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details