தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி; முடியாத வழக்கு - மீண்டும் ராதாபுரம் தொகுதியில் அதே வேட்பாளர்கள்! - controversial constituency

2016 ராதாபுரம் தொகுதி தேர்தலில், திமுக சார்பில் களம் கண்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோல்வியடைந்தார்.

Radhapuram constituency issue
Radhapuram constituency issue

By

Published : Mar 29, 2021, 8:04 PM IST

Updated : Mar 29, 2021, 9:39 PM IST

சென்னை: 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி ராதாபுரம் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் மீண்டும் அப்பாவு அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக அவர் தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தேர்தலிலும் அதே இரண்டு வேட்பாளர்கள் திமுக மற்றும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.

2016 ராதாபுரம் தொகுதி தேர்தலில், திமுக சார்பில் களம் கண்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோல்வியடைந்தார்.

வாக்கு எண்ணிக்கையில் பிரச்சினை என்ன? ஏன் அப்பாவு மற்றும் இன்பதுரை நீதிமன்றத்தை நாடினார்கள்?

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டிருந்த அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று 49 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இதனால் அதிருப்தியான அப்பாவு, இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால் வாக்கு எண்ணிக்கையை மறுபடி நடத்தக்கோரியும் வழக்கு தொடர்ந்தார்.

அப்பாவு தொடர்ந்த மனுவில் குறிப்பிட்டிருந்தபடி, 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டன.

இந்த சமயத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனால், யார் வெற்றி பெற்றது என்ற தகவலை வெளியிட தடை விதித்தது.

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி; முடியாத வழக்கு - மீண்டும் ராதாபுரம் தொகுதியில் அதே வேட்பாளர்கள்

பின்னணி?

2016ஆம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையின் போது புறக்கணித்தார்கள் என திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் மத்தியில் பேசப்பட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குகளை, தபால் ஓட்டுகளை சரியாக எண்ணவில்லை என தேர்தல் அலுவலர்களுடன் அப்பாவு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அங்கு பரபரப்பு நிலவியதால், அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் அப்பாவுவை குண்டுக்கட்டாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அவர் அங்கு உட்கார்ந்தபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அப்போதைய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் அளித்திருந்த மனுவில், ராதாபுரம் தொகுதியில் எமது கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அப்பாவு வெற்றி பெற்று விட்டார். தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் இன்பதுரையை தேர்தல் ஆணைய அலுவலர்கள் வெற்றி பெற்றதாக தவறாக அறிவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கின் தற்போதைய நிலை என்ன?

இது குறித்து அப்பாவுவின் வழக்கை கையாளும் திமுகவின் மூத்த வழக்கறிஞர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பி .வில்சன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த வழக்கு ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தபால் ஓட்டுகள் திமுகவின் அப்பாவுக்கே சாதகமாக உள்ளது. இந்த நிலையில் அப்பாவு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவரது சம்பளம் உட்பட எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Last Updated : Mar 29, 2021, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details