தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

குமரிக்கு வருகை தரும் பிரதமர் - ஏற்பாடுகள் தீவிரம்! - கன்னியாகுமரி மோடி பரப்புரை

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தரவுள்ளார். அவர் உரையாற்றவிருக்கும் மேடையின் கால்கோள் நாட்டு விழா, குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மோடி பரப்புரை, NARENDRA MODI IN KANYAKUMARI
கன்னியாகுமரி மோடி பரப்புரை

By

Published : Mar 28, 2021, 5:28 PM IST

கன்னியாகுமரி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், குமரி மக்களவை இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.

பாண்டிச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மூலம் கன்னியாகுமரி வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் பரப்புரை மேடை அமைக்கும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் வந்தடைகிறார்.

பின்னர் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக, அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை செய்கிறார்.

என் டாடியின் பேச்சைக் கேட்டுத்தான் மோடியுடன் இணைந்தேன் - ஏஜி சம்பத் அதிரடி!

இந்நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மைதானத்தில் கால்கோள் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details