தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

ஸ்டாலின் வாரிசு தவிர வேறு என்ன முத்திரை உள்ளது - உதயநிதியை சீண்டும் முதலமைச்சர்! - திருப்பூர் செய்திகள்

ஸ்டாலின் மேற்கொள்வது பொய் பரப்புரை எனத் தெரியப்படுத்தவே, அதிமுக அரசு பத்திரிகை வாயிலாகத் தகவல்களைப் பகிர்ந்து வருகிறது என்றும், ஸ்டாலின் வாரிசு தவிர, வேறு என்ன முத்திரை உதயநிதிக்கு உள்ளதென்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

palladam cm palaniswami election campaign
palladam cm palaniswami election campaign

By

Published : Feb 12, 2021, 10:38 PM IST

திருப்பூர்: மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, இன்று (பிப். 12) பல்லடம் பகுதிக்கு வந்தார்.

அப்போது பேசிய அவர், “திமுகவின் குடும்பங்களிலுள்ள அனைவரும் ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர். உதயநிதி ஒரு வாரிசு என்பதைத் தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுகதான். மக்களோடு மக்களாக அதிமுகவினர் பழகி வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு அவர் அப்பா பின்புலமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு மக்கள்தான் பின்புலம். சட்டமன்றத்திற்கும் ஸ்டாலின் வருவதில்லை. அரசு என்ன திட்டம் போடுகிறது என்பதுகூட ஸ்டாலினுக்குத் தெரியாது. ஸ்டாலின் மேற்கொள்வது பொய் பரப்புரை என தெரியப்படுத்தவே, அதிமுக அரசு, பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்திவருகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சட்டப்பேரவைத் தேர்தல்: அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே!

ஊழல் செய்ததற்காகத்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மைக் பிடித்து நேருக்கு நேர் வந்து குற்றச்சாட்டு வைத்தால், நானும் பதில் சொல்ல தயாராக உள்ளேன். ஆனால் அப்படி வராமல் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பொய் பரப்புரை மேற்கொள்கிறார் என்றார்.

முதலமைச்சர் பேசிய சமயத்தின் அவசர ஊர்தி ஒன்று அங்குக் கடக்க முற்பட்டது. அதற்கு வழிவிடும் படி கூறிய முதலமைச்சர், அவசர ஊர்தி சென்றவுடன் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details