தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் குற்றச்சாட்டு

காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் பிரதமர் மோடியின் படமும் மற்றும் அவர்களது தாமரை சின்னமும் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் குற்றச்சாட்டு
தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் குற்றச்சாட்டு

By

Published : Mar 31, 2021, 9:02 PM IST

Updated : Mar 31, 2021, 10:55 PM IST

உதகையில் பாஜக சார்பில் போட்டியிடும் போஜராஜ் என்பவரை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(மார்ச் 31) பரப்புரை மேற்கொண்டார்.

உதகையில் பாதுகாப்புப்பணி மேற்கொள்ள ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப்பணி மேற்கொள்ள வந்த காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நீலகிரி காவல் துறை சார்பில் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் பிரதமர் மோடியின் படமும் அவர்களது தாமரை சின்னமும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, மோடியின் புகைப்படம் மற்றும் தாமரை சின்னத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் நடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்பூ

Last Updated : Mar 31, 2021, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details