சென்னை: ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார்.
தேர்தல் களத்தில் கமல்; கோவை தெற்குத் தொகுதியில் போட்டி! - kamal haasan contesting constituency
கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மநீம கமல்ஹாசன்
அதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியிலும், துணைத் தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 43 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் கட்சி 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் கீழ்வருமாறு:
Last Updated : Mar 12, 2021, 3:57 PM IST