தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - நாகப்பட்டினம் செய்திகள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை நகரப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

By

Published : Apr 4, 2021, 4:18 PM IST

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் மயிலாடுதுறை நகரப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூறைநாடு, கச்சேரி சாலை, பசுபதி தெரு, சின்னக்கடை தெரு, எடத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பரப்புரையில் ஈடுபட்டார். தொண்டர்கள் தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:'வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை' - சுவரொட்டியால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details