தூத்துக்குடி: கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி நகரப் பகுதிகளில் உள்ள மாதா கோவில் தெரு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு, பகத்சிங் தெரு, வ.உ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடந்த நிகழ்வில், அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.