தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் குறிஞ்சி மணி. இவர் தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக உள்ளார்.
இவரது இல்லத்தில் இன்று (ஏப்.3) காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்துள்ளனர்.
இந்த வீடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் வீடு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் அலுவலகத்திற்கு தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வருகை தந்துள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷாவை வரவேற்க எம்ஜிஆர், ஜெயலலிதா பாடல்கள் - காணாமல் போன அதிமுக கொடி!