தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

திமுக வேட்பாளர் நண்பரின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை - அதிரடி சோதனை

நாமக்கல்: திமுக வேட்பாளர் நண்பரின் வீட்டில் வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் நண்பரின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
திமுக வேட்பாளர் நண்பரின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

By

Published : Apr 4, 2021, 8:27 AM IST

நாமக்கல் இ.பி. காலனியைச் சேர்ந்தவர் சரவணன். திமுக நகர வர்த்தக அணிச் செயலாளராக உள்ள இவர் நாமக்கல் திமுக வேட்பாளர் இராமலிங்கத்திற்கு நெருங்கிய நண்பரும் ஆவார்.

இந்நிலையில், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், சரவணன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் வருமானவரித் துறைக்குப் புகார் சென்றது.

அதனடிப்படையில், வருமானவரித் துறையினர், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அவரது வீட்டில் இன்று (ஏப்ரல் 3) இரவு 7 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இங்கு, சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து அலுவலர்கள் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்தச் சோதனை திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி

ABOUT THE AUTHOR

...view details