நடைபெற உள்ள 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், இன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விருதுநகரில் 18 பேர் களத்தில் உள்ளனர்.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மொத்தம் 31 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனு பரிசீலனையில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், இருபது பேரில் இரண்டு பேர் வாபஸ் பெற்றனர்.
தற்போது திமுக,பாஜக,அமமுக,நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி, தேச மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் இந்தியர் கட்சி ஆகிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தவிர 11 சுயேச்சைகள் சேர்த்து மொத்தம் 18 பேர் களத்தில் உள்ளனர். சாத்தூரில் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மொத்தம் 40 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், வேட்புமனு பரிசீலனையில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மதிமுக., அதிமுக., அமமுக., நாம் தமிழர், இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், பகுஜன் திராவிடக் கட்சி, உள்ளிட்ட 10 கட்சி வேட்பாளர்கள் உட்பட 17 சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராஜபாளையம் (202)
தகுதியான வேட்பாளர்கள் -25
திரும்பப்பெறப்பட்டது -11
இறுதி வேட்பாளர்கள்-14
ஸ்ரீவில்லிபுத்தூர் (203)
தகுதியான வேட்பாளர்கள் -23
திரும்பப் பெறப்பட்டவை -8
இறுதி வேட்பாளர்கள் -15
ஆண்- 10
பெண் - 5
சாத்தூர் (204)
தகுதியான வேட்பாளர்கள் - 27
இறுதி வேட்பாளர்கள் - 27
ஆண் வேட்பாளர்கள் - 26
பெண் வாக்காளர்கள் - 1
சிவகாசி (205)
தகுதியான வேட்பாளர்கள் - 31
திரும்பப்பெறப்பட்டது - 5
இறுதி வேட்பாளர்கள் - 26
ஆண் வேட்பாளர்கள்- 21
பெண் வேட்பாளர்கள் - 5
விருதுநகர் (206)
தகுதியான வேட்பாளர்கள்- 20