கடலூர்: திமுக வேட்பாளர் பரப்புரையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி. ஐயப்பன் போட்டியிடுகிறார். இச்சூழலில் சுத்துகுளம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மேற்கொண்ட பரப்புரையில், “தேர்தலுக்காகச் சிலர் வழங்கும் பணத்தையோ அல்லது பொருளையோ விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதனை 6ஆம் தேதி வரையில் செலவு செய்து விடாதீர்கள்.
'நயன்தாராவுக்காக ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ராசாவை ஏன் நீக்கவில்லை?'
ஏனெனில், கேரளாவிலிருந்து மந்திரவாதிகளை வரவழைத்துள்ளேன். அவர்கள் மூலமாகச் சூனியம் வைத்திருக்கிறேன். யாராவது பணம், பொருள் வாங்கிக் கொண்டு திமுகவிற்கு ஓட்டுப் போடாமல் சென்றால் அவர்களுக்கு வயிற்று வலி, காய்ச்சல் ஏற்படும். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் ஐயப்பன் பேச்சு வாக்குக்கு பணம் வாங்குவது குற்றம் என்று இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால் வாங்குங்கள் என்று கூறியிருப்பதும், சூனியம் வைத்திருப்பதாக மிரட்டியிருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.