தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

சில்லி சிக்கன் பரிமாறி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு! - தேமுதிக வேட்பாளர் சில்லி சிக்கன் பரிமாறி வாக்கு சேகரிப்பு

கரூர்: வாக்காளர்களை கவரும் வகையில் சில்லி சிக்கன் பரிமாறி, தேமுதிக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் செய்திகள்
சில்லி சிக்கன் பரிமாறி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

By

Published : Mar 25, 2021, 1:53 PM IST

Updated : Mar 25, 2021, 5:40 PM IST

கரூர் மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி என. தங்கராஜ், மார்ச் 24ஆம் தேதி இரவு கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரூர் கோவை சாலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையில் இருபுறமும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பின் கரூர் கோவை சாலை உள்ள ரெட்டிபாளையம் புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு பிரியாணி கடைக்குள் புகுந்த தேமுதிக வேட்பாளர் அங்கு கடைக்காரரின் அனுமதிபெற்று சில்லி சிக்கன் சமைத்து அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு பரிமாறினார். அப்போது குடும்பத்தோடு அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்களிடம், “நீங்கள் விரும்பும் உணவை தேர்வு செய்வதை போல கரூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இதுபோ நான் சேவையாற்ற தயாராக இருக்கிறேன். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என பரப்புரையில் ஈடுபட்டார். மேலும் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்கள் பரப்புரை கூட்டங்களுக்கு, பொதுமக்களை அழைத்துச் சென்று விடுவதால், வெளியே பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களுக்கு, வாக்காளர்களை கவரும் வகையில் பரப்புரை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! - சைதாப்பேட்டை மநீம வேட்பாளர் சினேகா மோகன்தாஸ்!

Last Updated : Mar 25, 2021, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details