சென்னை: வாக்கு எண்ணும் மையங்களின் கரோனா கட்டுப்பாடு விதிக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது கரோனாத் தொற்று அதிகரித்து வருவதால், வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதசாகு, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பொதுப் பணித் துறை செயலாளர் மணிவாசகம் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்தும், முகவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, மையங்களுக்கு முன் அரசியல் கட்சியினரின் கூட்டத்தை குறைப்பது, வெற்றி பெறும் வேட்பாளர்களின் கொண்டாடங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.