தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'இந்த முறையும் வெற்றி பெறுவேன்' - ஜேசிடி பிரபாகரன் உறுதி - வில்லிவாக்கம் அதிமுக

2021ஆம் ஆண்டுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு தலா 1,500 ரூபாய் போன்ற அறிவிப்புகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரன்
வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரன்

By

Published : Mar 14, 2021, 8:28 AM IST

சென்னை: வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜேசிடி பிரபாகரன் நேற்று (மார்ச்.13) தனது தேர்தல் பரப்புரையை அயனாவரம் பகுதியில் இருந்து தொடங்கினார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2021ஆம் ஆண்டுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு தலா 1,500 ரூபாய் போன்ற அறிவிப்புகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நான் ஒவ்வொரு பகுதியாக செல்லும்போது, மக்கள் என்னிடம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளை கூறிவருகிறார்கள். நான் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற பின், குறைகளைத் தீர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளேன்.

வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரன்

வில்லிவாக்கம் தொகுதியில் மக்களோடு மக்களாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மூன்றாவது முறையாக மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details