தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

அமமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - ttv dhinakaran

அமமுக தனது 3ஆம் கட்ட வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான 2ஆம் கட்ட வேட்பாளார்கள் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AMMK Candidate List 3, AMMK Candidate List 3rd release, அமமுக வேட்பாளர்கள் பட்டியல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், டிடிவி தினகரன், ttv dhinakaran, amma makkal munetra kazhagam
அமமுக வேட்பாளர்கள் பட்டியல்

By

Published : Mar 12, 2021, 7:59 PM IST

சென்னை:அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக தலைமை முன்னதாகவே வெளியிட்ட நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 11) வெளியிட்டது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுவதன் மூலம் போட்டி கடுமையாகியுள்ளது. கோவில்பட்டி தொகுதி பாரம்பரியமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வெல்லும் தொகுதி. 2006ஆம் ஆண்டு முதல் அதிமுக இங்கு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது.

இம்முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் வலுவாக களம் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடம்பூர் ராஜூக்கு மேலும் சிக்கலை அளிக்கும் விதமாக தினகரன் களம் இறங்கியுள்ளார்.

தற்போது 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் காணலாம்.

அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 1
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 2
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 3
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 4
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 5
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 6
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 7
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 8
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 9
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 10
அமமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | பக்கம் - 11

ABOUT THE AUTHOR

...view details