சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சி!
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன். இருப்பினும், தெலங்கானா, ஆந்திரா தவிர்த்து, பிற மாநிலங்களிலும் இந்தக் கட்சிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், பிகார் போன்ற மாநிலங்களிலும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. அண்மையில் பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இது தவிர தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுகவுடன் கூட்டணி அமைத்து, சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பலமாகத் தக்கவைத்துள்ளது கவனிக்கத்தக்கது.