தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்க சூறாவளி பரப்புரையைக் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் கே.பழனி
அப்போது, எளிய முறையில் மக்களோடு மக்களாக சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் இன்று (மார்ச் 30) காலை ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனி உணவருந்தி சிறு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
அவருக்கு கூட்டணிக் கட்சியினரும், பொது மக்களும் உற்வாக வரவேற்பை அளித்தனர். வாக்கு சேகரிப்பில் அதிமுக, பா.ம.க, பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ’மோடியின் பக்கபலமாக செயல்படும் இபிஎஸ் ஓபிஎஸ்' - சீதாராம் யெச்சூரி