தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - பப்ஜி மதனின் மனைவி

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-June-2021/12190679_815_12190679_1624095710327.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-June-2021/12190679_815_12190679_1624095710327.png

By

Published : Jun 19, 2021, 3:16 PM IST

Updated : Jun 19, 2021, 4:27 PM IST

15:06 June 19

பெண்கள் குறித்து யூ-ட்யூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

சென்னை: தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி, அதை தனது யூ-ட்யூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்துள்ளார் மதன். தனது யூ-ட்யூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர், சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

லேப்டாப், கார் பறிமுதல்

இதனையடுத்து மதனை தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சேலம், பெங்களூர், தர்மபுரி ஆகிய இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், பப்ஜி மதன் தர்மபுரி மாவட்டம் மதன்கூன்பாளையம் என்ற இடத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக நேற்று (ஜூன் 18) தகவல் கிடைத்தது. 

இதனைத்தொடர்ந்து தருமபுரி விரைந்த  மத்திய குற்றப் பிரிவு தனிப்படை காவல்துறையினர் மதனை கைது செய்தனர். மேலும் லேப்டாப், செல்போன், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வங்கி கணக்குகளையும் முடக்கினர்.

14 நாள் ரிமாண்ட்

கைது செய்யப்பட்ட மதனை சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மதனை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்பு இன்று (ஜூன் 19) ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் (ஜூலை 3 வரை )நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதனையடுத்து, மதன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மதனின் மனைவி கிருத்திகாவையும், மதனையும் ஒன்றாக காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தீர்களா? புகாரளிக்க இமெயில் ஐடி வெளியீடு

Last Updated : Jun 19, 2021, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details