தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

காதலை சொல்ல இளம்பெண் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்! - சேத்துப்பட்டு காவல் நிலையம்

சென்னை: காதலை தெரிவிக்க இளம்பெண் வீட்டிற்குள் புகுந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

enquiry
enquiry

By

Published : Jan 30, 2021, 12:51 PM IST

சென்னை சேத்துப்பட்டு மங்கலாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 18 வயது நிரம்பிய மகளை, சேத்துப்பட்டு பூங்காவில் படகு ஓட்டி வரும் விக்னேஷ் குமார் (22) என்பவர் காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை பார்க்கும் இடத்தில் எல்லாம் வழி மறித்து தன்னை காதலிக்குமாறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததால், விக்னேஷ் குமாரை பெண்ணின் தந்தை கண்டித்துள்ளார். ஆனாலும் விக்னேஷ் குமாரின் தொந்தரவு நிற்காததால், பெண்ணை அதேப்பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் இளம்பெண் தனது பாட்டி வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த விக்னேஷ் குமார், அவரை சந்திப்பதற்காக நேற்றிரவு திடீரென அவ்வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த பெண்ணின் பாட்டி, விக்னேஷ் குமாரை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து விக்னேஷ் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிவன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: சிறுவன் உள்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details