திருநெல்வேலி: இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள பிராஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், இன்று (செப்.15) காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
தலை துண்டித்து கொலை
அதன்பிறகு அவரது தலையைத் துண்டித்து, அந்த கும்பல் எடுத்துச் சென்றது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தலையைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
Also read:பெங்களூருவில் கோர விபத்து: 30 அடியிலிருந்து விழுந்த இருவர் உயிரிழப்பு
அப்போது சற்று தூரத்தில் தலை கிடந்ததைக் கண்ட காவல் துறையினர் அதனைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு உடலுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கொலை குறித்து விசாரணை நடத்தினார். மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.
தொடரும் படுகொலைகள்
இதேபோல் நேற்று முன்தினம் (செப்.13) இரவில் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
Also read:அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
கடந்த மூன்று தினங்களில் இரண்டு படுகொலைகள் மாவட்டத்தில் நடந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலை நடந்த இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.