திருவள்ளூர்: குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர்(36). அதே பகுதியிலுள்ள கிரசரில் வேலை செய்து வந்தார். இன்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர். இதைக் கண்டதும் தனசேகர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அருகிலிருந்த காலி இடத்திற்கு நண்பருடன் இறங்கி ஓடினார்.
ஆனால், கொலைவெறியுடன் இருந்த கும்பல், தனசேகரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.