தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் திக்... திக்...! - youth attack by gang in thirunelveli

திருநெல்வேலி: கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்பகையை மனத்தில் வைத்து இளைஞர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் பயங்கரம்!
பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் பயங்கரம்!

By

Published : Feb 20, 2021, 1:25 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மகாராஜன் (22). தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் இவருக்கும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (23), அருண் (22), சுசி மாரிமுத்து (22) உள்ளிட்ட நபர்களுக்கும் இடையே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், முன்பகையை மனத்தில் வைத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஜனை கணேசபுரம் பகுதியில் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் இளைஞரை கடுமையாகத் தாக்கிய கும்பல் - நெல்லையில் பயங்கரம்

இந்தச் சம்பவம் குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மணிகண்டன், அருண், சுசி மாரிமுத்து ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தப் பயங்கர சம்பவத்தில் நல்வாய்ப்பாக மகாராஜனுக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவியை குத்திக் கொன்று தப்பித்தபோது வாகன விபத்தில் மருத்துவர் காயம்

ABOUT THE AUTHOR

...view details