தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்மாக்கிய இளைஞர் போக்சோவில் கைது! - திண்டுக்கல் செய்திகள்ட

காதலிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து, அவரை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பள்ளி மாணவியை கர்ப்மாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கர்ப்மாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

By

Published : Jan 20, 2021, 5:09 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோர் கடந்த 15ஆம் தேதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மாணவியை தேடி வந்த காவல் துறையினர், இளைஞர் ஒருவருடன் மாணவி கோவையில் இருப்பது தெரிந்து அவரை மீட்டுவந்தனர்.

மாணவியிடம் நடத்திய விசாரணையில், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சாம்சன் என்ற இளைஞர், கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பமாக்கியதும், தன்னைக் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் சாம்சனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் கற்பமான சிறுமி: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details