திருச்சி: வையம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 19) இரவு, கருங்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த கவரப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் ( 21 ) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி இருசக்கர வாகனங்களைத் திருடியதை காளிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.