கரோனா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள், காவல் சித்ரவதை, குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுப்படுத்தி அவமானப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைகள் பட்டியலின மக்கள் மீது அதிகரித்துள்ளன.
கரோனாவைவிட கொடிய நோயான சாதிவெறி உயிர்ப்புடன் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேனியில் நடந்திருக்கும் சாதிய தாக்குதல் மேலும் பலரது வெறுப்பை உமிழச் செய்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (24). வேளாண் கூலித்தொழிலாளியான இவர், நேற்று (பிப். 16) காலை அப்பகுதியில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்துவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவரும் அமர்ந்து புகைப்பிடித்துள்ளார்.