சென்னை: தண்டையார் பேட்டை கேசவன் தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் சின்ன தம்பி என்ற சின்னா (18). இவர் காசிமேடு, புதுமணைக்குப்பம் 4ஆவது தெருவில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 16 வயதான சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பல முறை அச்சிறுமியின் விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.