தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் - கிருஷ்ணகிரி பைக்

ஓசூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இளைஞர் ஒருவர் உயிர் தப்பினார்.

திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

By

Published : Apr 30, 2022, 9:37 PM IST

கிருஷ்ணகிரி:ஓசூர் அருகேவுள்ள ஜூஜூவாடியைச் சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒகேநா எலக்ட்ரிக் வாகனம் வாங்கியுள்ளார்.

உயிர் தப்பிய இளைஞர்

தொடர்ந்து அந்த இருசக்கர வாகனத்தை அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்.30) காலை ஜூஜூவாடியில் இருந்து உப்கார் லேஅவுட் பகுதிக்கு தன்னுடைய எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் எலக்ட்ரிக் பைக் தீப்பற்றியது. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ் சட்டென்று கீழே இறங்கினார்.

தீ பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஆனால், எலக்ட்ரிக் வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து ஓசூரில் உள்ள ஷோரூமிற்கு தகவல் அளித்தார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Video:பைக்கில் சென்றவரை பாறை அடித்துச் சென்ற காணொலி

ABOUT THE AUTHOR

...view details