சென்னை:தாம்பரம் அடுத்த கடப்பேரியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மூன்று வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அருகே இருந்த வீட்டிற்குச் சென்று பெற்றோர் தேடினர்.
அப்போது, அதே தெருவைச் சேர்ந்த பிரேம் குமார் (22) என்ற இளைஞர் சிறுமியிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதை சிறுமியின் பெற்றோர் நேரடியாக பார்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேம்குமாரை அடித்து உதைத்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.