தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஊரடங்கால் வேலையிழப்பு: இருசக்கர வாகனம் திருடிய இளைஞர்கள் கைது! - crime news

கரோனா தொற்று ஊரடங்கால் வேலையிழந்த இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயற்சித்தபோது காவல் துறையினரிடம் சிக்கினர்.

இளைஞர்கள் கைது
இளைஞர்கள் கைது

By

Published : Jul 10, 2021, 6:08 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுமணி. இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் முன்பு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி காவல் நிலையத்தில் வேலுமணி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்துவந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரு இளைஞர்கள் விற்பனை செய்ய முயற்சித்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிரசர் மேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், கோயம்புத்தூர் மாவட்டம் பெத்திக்குட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

இருவரும் கட்டட வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வேலையிழப்பால் வருமானம் இன்றி தவித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் வசூல்... அலுவலர்கள் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details