தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வீடியோ: நடனமாடியபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்! - Ananthapur of AP

நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, தொடர்ந்து பல மணி நேரமாக நடமாடிய இளைஞர் தரையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

நடனமாடியபடியே உயிரிழந்த இளைஞர், வைரல் வீடியோ, ஆந்திர சோகம், ஆந்திரா வைரல், Young man dies while dancing, Ananthapur of AP, அனந்தபுரம்
நடனமாடியபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்

By

Published : Sep 13, 2021, 1:49 PM IST

Updated : Sep 13, 2021, 3:26 PM IST

அனந்தபுரம் (ஆந்திர பிரதேசம்):நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் நவராத்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சூழலில், அம்மாநிலத்தின் அனந்தபூரம் மாவட்டத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்தேறியுள்ளது.

அங்கு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தரை மேடையில், இளைஞர்கள் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளானர். இதனைக் கேட்ட கிராம மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இது தொடர்பான விசாரணையில், பல பணிநேரங்களாக விடிய விடிய நடனமாடியதால் இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு, உறவினர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடனமாடியபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்

தற்போது, இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Last Updated : Sep 13, 2021, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details