தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை - crime news

செல்போன் விளையாட்டிற்கு அடிமையான மகனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் உடலைக் கைப்பற்றி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

By

Published : Sep 29, 2021, 6:45 PM IST

Updated : Sep 29, 2021, 7:29 PM IST

திருநெல்வேலி: திசையன்விளை அருகே ஆன்லைன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், 15 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மன்னார்புரத்தைச் சோர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய். இவர் நீண்ட நேரம் செல்போனில் பிரீ பயர் கேம் விளையாடியுள்ளார். இதனைக் கண்டித்த அவரது தாயார், படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் மகன் காணவில்லை எனப் பெற்றோர் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Sep 29, 2021, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details