தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பெண்களை சீரழித்து வீடியோ விற்பனை - கின்னஸ் சாதனை யோகா பயிற்சியாளர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்து பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட யோகா பயிற்சியாளரை கற்பழிப்பு வழக்கில் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Yoga master arrest
Yoga master arrest

By

Published : Oct 6, 2021, 8:34 PM IST

சென்னை: பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை படமெடுத்து சீனா ஆபாச வலைதளங்களில் பணத்திற்கு விற்பனை செய்ததாக யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யோகா பயிற்சியாளர் யோகராஜ் என்ற பூவேந்திரன் சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தொடர்ந்து 40 மணிநேரம் யோகா பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யோகா பயிற்சியாளர் மீது புகார்

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான மருத்துவ துறையில் வேலை பார்க்கும் பெண், ஷ்யாம் என்ற தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி உதவியுடன் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

யோகாவில் கின்னஸ் சாதனை

அந்த புகாரில், யோகராஜிடம் யோகா கற்றுக்கொள்ள சென்றேன், பார்ட்னர் யோகா என்ற பெயரில் தன்னை அந்தரங்க பகுதிகளில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்தார். மேலும், தொடர்ந்து தன்னை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி பழகி வந்தார். அவருடைய பிறந்த நாளுக்கு வீட்டுக்கு அழைத்தார், அப்போது சர்பத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதுமட்டுமல்லாமல் அதை வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து என்னை மிரட்டி வந்தார். நான் மட்டுமில்லாது இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

யோகா பயிற்சியாளர் கைது

இதுதொடர்பான ஆடியோ, வீடியோ, வாட்ஸ்அப் சாட் ஆதாரங்கள் அனைத்தையும் அப்பெண் காவல் துறையினரிடம் அளித்துள்ளார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், யோகராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து யோகராஜ் மீது பாலியல் வன்கொடுமை செய்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யோகராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை விரைவில் சிறையில் அடைக்க உள்ளனர்.

பல பெண்களிடம் யோகா பயிற்சி அளிப்பதாகக் கூறி யோகராஜ் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சீனாவில் யோகா பயிற்சியாளர்

பாலியல் வலைதளங்களுக்கு விற்பனை

இது தொடர்பாக பேட்டியளித்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி ஷியாம், யோகராஜ் மீது ஹாங்காங், மும்பை உள்ளிட்ட இடங்களில் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை யோகா பயிற்சி அளிக்கும் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக படமெடுத்து சீனாவில் பாலியல் வலைதளங்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக இருக்கும் பெண் ஒருவர் ஹாங்காங்கில் இருந்து வீடியோக்களைக் பெற்றுக் கொண்டு இவருக்கு சேர வேண்டிய பணத்தை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். மேலும் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி புகாரளிக்க முன்வந்தால் அவர்களுக்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆர்யன் கானை பற்றி எனக்குத் தெரியும் - ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி

ABOUT THE AUTHOR

...view details