மயிலாடுதுறை:. சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி(36), கார்த்திகேயன்(35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூன்று பேரும் பணத்தைக் கேட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.