தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

திட்டக்குடி, மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு - அனிதா வயது 27 இவர் நான்கு மாத கர்வமாக இருந்தார் பின்னர் மெடிக்கலில் கருக்கலைப்பு செய்தனால் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திட்டக்குடி அருகே சட்ட விரோதமாக மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்தார்.

திட்டக்குடி அருகே மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு
திட்டக்குடி அருகே மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

By

Published : May 8, 2022, 2:09 PM IST

கடலூர்:திட்டக்குடி அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் முருகன் (52). இவர் ராமநத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மெடிக்கல் நடத்திவருகின்றார். இவர் தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் மறைமுகமாக பல வருடங்களாக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (மே7) பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேல்முருகன் என்பவரது மனைவி அனிதா (27) என்பவர் மெடிக்கலுக்கு வந்துள்ளார்.

அவர் 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வயிற்றில் உள்ள 4 மாத கருவை கலைக்க கேட்டுள்ளார். அதற்கு மெடிக்கல் நடத்திவரும் முருகனும் சம்மதித்துள்ளார்.

அதன்படி, மெடிக்கல் அருகேயுள்ள கருக்கலைப்பு செய்வதற்கு என்று தனியாக வைத்துள்ள அறைக்கு அனிதாவை அழைத்து சென்று கருகலைப்பு மாத்திரை கொடுத்துள்ளார். இதில் அனிதா மயக்கம் அடைந்துள்ளார்.

அனிதாவிற்கு மாலை வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. மேலும் இரத்த போக்கு அதிகரித்துள்ளது. முருகன் பயந்துபோய் அனிதாவையும் அவரது கணவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு அனிதா மற்றும் அவரது கணவர் வேல்முருகனை அழைத்து சென்று உள்ளே இருவரையும் அனுப்பி வைத்து விட்டு முருகன் அங்கிருந்து தனது காரில் தப்பிச் சென்றுள்ளார். அனிதாவை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பற்றி ராமநத்தம் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர். இதுபோல் சம்பவம் இப்பகுதியில் அதிகமாக நடைபெறுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அனிதா-வேல் முருகன் தம்பதியருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details